Visitors have accessed this post 152 times.

அரசனுடைய தேர்வு

Visitors have accessed this post 152 times.

ஒரு ஊரில் ஓர் அரசன் இருந்தார். அவர் வாழ்க்கை பாடத்தை கற்பிப்பதற்காக ஒரு போட்டியை நடத்தினார். அந்தப் போட்டி என்னவென்றால் ஒரு தோட்டத்திற்குள் நுழைய வேண்டும். அந்தத் தோட்டத்தில் இடது புறமும் வலது புறமும் அந்த மரங்கள் நிறைந்து பழங்கள் காணப்படுகின்றன. அந்தப் பழங்களை யார் கூடை நிறைந்து பறித்து வருகிறாரோ அவர் தான் அந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர் ஆவார். அவருக்கு தக்க சன்மானங்கள் கிடைக்கும்  என்றும் அறிவிக்கிறார். அந்தப் போட்டியின் நிபந்தனை என்னவென்றால் அதில் நுழைவதற்கும் ஒரே வழி. அதிலிருந்து வெளியேறுவதற்கும் ஒரே வழி. நாம் பயணம் சென்றவுடன் திரும்பிப் பயணம் சென்ற வழியை அடைய முடியாது. ஒருமுறை பயணம் செய்தால் அவ்வளவுதான். எனவே கடந்து சென்றதை திரும்ப பெற முடியாது என்பதுதான் நிபந்தனை. இந்த நிபந்தனையை ஏற்று போட்டியில் இருவர் கலந்து கொள்கின்றனர்.

அதில் முதல் ஒரு மனிதர் தோட்டத்திற்குள் நுழைகிறார். நுழைவாயில் நுழைந்ததும் முதலில் இடது வலது புறத்தை பார்க்கிறார். அந்த இடது புறமும் வலது புறமும் பழங்கள் கொள்ளை அடிக்கின்ற நிறத்திலே அற்புதமான தரத்திலே புதுமையான பழங்கள் மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆஹா!!!! ஆஹா!!! எவ்வளவு அருமை!!! எவ்வளவு அருமை!!! எவ்வளவு அழகான தோற்றமளிக்கின்றனவே!!! எல்லையில்லா ஆனந்தம்!!! எல்லையில்லா ஆனந்தம்!!!! என மனதில் நினைத்து இன்று வெற்றி பெறப்போவது நாம் தான் என்ற கர்வத்தோடு அவர் மரத்தை நோக்குகிறார்.உடனே அந்தப் பழங்களை பறித்து இந்த கூடையில் போட்டு நாம் வென்றுவிட வேண்டும் என்றும் அவர் ஆசை கொள்கிறார். ஆனால் பரிதாபம்!! இவர் மனதினில் இன்னொரு எண்ணமும் தோன்றுகிறது. முதலில் பார்க்கும் பொழுதே இவ்வளவு அழகாக பழங்கள் இருக்கிறதே இன்னும் செல்ல எவ்வளவு அழகான பழங்களை நாம் பார்க்கலாம் இப்பொழுது பறித்து விட்டாலே கூடை நிரம்பிவிடும். பிறகு போக போக நம்மால் அதிகமான பழங்களை பறிக்க முடியாது. இனி செல்லும் வழியில் இதைவிட அதிக தரம் வாய்ந்த அழகான நிறத்தோடு இன்னும் பழங்கள் இருந்தால் அப்பொழுது என்ன செய்வேன்.! என்று நினைத்தவாறு அவர் அந்த மரங்களை கடந்து செல்கிறார். மீண்டும் அவர் பயணத்தை ஆரம்பிக்கிறார். நிபந்தனை என்ன நினைவிருக்கிறதா நிபந்தனை கடந்து சென்ற வழியை திரும்பப் பெற முடியாது என்பதுதான். அதை அவர் மறந்துவிட்டார். அவர் பயணத்தை ஆரம்பம் செய்கிறார். அவர் பயணம் ஆரம்பம் செய்ய செய்ய சிறுதூரம் கடக்க கடக்க அவர் பார்க்கிறார். அந்த மரங்களில் முன்பை போல இல்லாமல் அதைவிட குறைந்த தரத்தோடு குறைவான பழங்கள் தான் காணப்படுகின்றன. மீண்டும் தன் பயணத்தை மிகுந்த ஆவலோடு இன்னும் சில தூரங்கள் கடந்த பின்பு நாம் அழகான பழங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவர் பயணத்தை ஆரம்பிக்கிறார். ஆனால் பாவம் பரிதாபம் மீண்டும் அவர் பயணத்தை ஆரம்பம் செய்யும் பொழுது அவர் கடந்து செல்லக்கூடிய வழிகளில் பார்க்கிறார். போகப் போக மிக மோசமான நிலை தான். கடைசியில் அந்த மரங்களில் பழங்களே இல்லை வெறும் மரம் மட்டும்தான் இருக்கிறது.அவர் கூடையும் பார்க்கிறார் மரங்களையும் பார்க்கிறார்.  மனதில் கஷ்டம்!! எவ்வளவு நஷ்டம்!! என்று மிகவும் அவர் ஆதங்கப்படுகிறார். அப்பொழுது பார்க்கிறார் நாம் முதலிலேயே அந்தப் பழங்களைப் பருத்திருந்தால் இந்தக் கூடையை நிரப்பி இருக்கலாம். ஆனால் நாம் தான் அஜாக்கிரதியாக விட்டுவிட்டோம். அதனால் தான் இந்த சோகம் என்ன செய்வது என்று கைசேதப்பட்டவராக வெளியேறக் கூடிய வழியிலே வெளியேறுகிறார்.

இப்பொழுது போட்டி நிறைவுக்கு வரும்பொழுது அவருடைய நிலைதான் என்ன நமக்கே தெரியும். அல்லவா!!! இன்னொரு மனிதர் போட்டியில் நுழைகிறார். அவர் நுழைவு வாயிலில் நுழைந்ததும் வலது புறத்தை பார்க்கிறார். அழகான பழங்கள் கொள்ளை அடிக்கக் கூடிய அற்புதமான நிறங்களிலே மிக மிக அருமையான தோற்றத்தோடு அழகாக காட்சி அளிக்கின்றன. எவ்வளவு அழகான காட்சி இது!!! அற்புதமான காட்சி இது!!! என்று தன் கண்ணை சிமிட்டாமல் அதை அழகாக நோக்குகிறார்.பிறகு வரக்கூடிய பாதையில் எப்படி இருக்குமோ தெரியாது. நான் வாய்ப்பு கிடைக்கும் பொழுதே நம் கூடையை நிரப்பிக் கொள்ளலாம் என்று எண்ணியவாறு முதல் மரங்களிலேயே இருந்த பழங்களை பறித்துக் கூடையை நிரப்பிக் கொண்டார். பின்பு தன் பயணத்தை தொடர்கிறார். செல்ல செல்ல அவர் முதலில் செய்தது சரி என்றவாறு அவர் மனதினிலே தோன்றியது. ஏனென்றால் பயணம் செல்ல செல்ல கடந்து செல்லக்கூடிய வழிகளில் பார்க்கிறார் முதல் மரங்களை விட பழங்களும் குறைவாக சென்று கொண்டு இருந்தது. மேலும் அதன் தரமும் குறைந்து கொண்டே போனது. கடைசியில் பார்க்கும் பொழுது அந்த மரங்களில் பழங்கள் இல்லாமல் வெறும் மரங்கள் மட்டும்தான் மீதம் இருந்தன. இறைவனுக்கு நன்றி செலுத்தியவாறு நாம் செய்தது சரிதான் முதலிலேயே கூடைய நிரப்பிக் கொண்டது நல்ல வேலை என்று நினைத்துக் கொண்டு அவர் தன் பயணத்தை நிறைவு செய்து வெளியேறுகின்ற வழியிலேயே வெளியேறுகிறார். இப்பொழுது அரசன் போட்டியின் நிறைவு பகுதிக்கு வந்தார். அப்பொழுது அவர்கள் இருவரையும் நிற்க வைத்து அவர் கேள்வி கணக்குகளை தொடுத்தார். என்ன??? உன் கூடை காலியாக உள்ளது என்று முதல் மனிதரைப் பார்த்து கேட்டார். அதற்கு அவர் அரசரே நான் முதலில் இந்த தோட்டத்தில் நுழைந்ததும் நான் கர்வததோடு இன்னும் செல்கின்ற வழிகளிலே நாம் கூடையை நிரப்பிக் கொள்ளலாம் என்று எண்ணினேன். ஆனால் என் பாதை கடக்க கடக்க நான் மிகவும் கைசேதப்பட்டு ஏனென்றால் பழங்களும் குறைந்து கொண்டே சென்றன. கடைசியில் மரம் மட்டும்தான் மீதமிருந்தது. கை சேதப்பட்டேன்  நஷ்டம் அடைந்த நான் கவலைக்கு உள்ளானேன். என்னே ஒரு சோகம்!!! நான் தோல்வியுருவேன் என்று நான் வெளியேறும்போதே அறிந்திருந்தேன் அரசரே!! என்று கூறினான். இரண்டாவது மனிதன் அரசரே நான் வாய்ப்பு கிடைக்கும் பொழுதே அந்த பழங்களை எல்லாம் என் கூடையில் நிரப்பிக் கொண்டேன். எனவே நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடு உன் முன்னால் நான் நிற்கின்றேன் என்று கூறினார்.

இதை கேட்ட அரசர் ஆம் வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம். சரியாக சொன்னீர். உன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதால் நீர் இப்பொழுது வென்று விட்டீர். உமக்கே இந்த சன்மானம் என்று அவருக்கு சன்மானங்களை வழங்கினார். எனவே வாய்ப்பு கிடைக்கும் பொழுதே அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது. இதுதான் இந்த கதையினுடைய நீதிக்கருத்து. எனவே நாம் நம்முடைய வாழ்வில் எப்பொழுது வாய்ப்பு கிடைத்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வாய்ப்புகளை தவறவிடக்கூடாது.

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது பழமொழி. அந்த பழமொழிக்கு ஏற்ப நாமும் எப்பொழுது எல்லாம் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அதை பயன்படுத்தி நம் வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். மீண்டும் ஒரு கதையில் சந்திக்கலாம் நன்றி.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam