Visitors have accessed this post 266 times.

நானே வருவேன் – பகுதி 17

Visitors have accessed this post 266 times.

 பாகம் 17

 

நிச்சயதார்தத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையிலும் கூட வீரராகவன் கடமையே கண்ணாகக் கருதி அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க வந்த செல்வராகவனுடைய நெருங்கிய நண்பர் மனோகர் “என்ன மாப்ள சார் நாளைக்கி நிச்சயத வச்சுக்கிட்டு இன்னக்கி வந்து வேல பாத்துட்டு இருக்கீங்க? எங்க போனா ஒங்க டாடி படவா ராஸ்கல்!” என்று குறும்புடன் கேட்டார்.

“சும்மா கிண்டல் பண்ணாதிங்க அங்கிள் அப்பா ஆபீஸ் போகாதன்னு தா சொன்னாரு நிச்சயத்துக்கான வேலயெல்லா அப்பா தா பாத்துட்ருக்காரு நா ஹெல்ப் பண்றேனு சொன்னா நீ இங்க எந்த வேலயு பாக்கக் கூடாதுன்னு சொல்லீட்டாரு, வீட்ல சும்மா ஒக்காந்து நா என்ன அங்கிள் பண்ணப் போறே அதா கெளம்பி ஆபீஸ் வந்துட்டே” .

“அது சரி இப்ப ஒனக்கு என்ன வேல இருக்க போகுது கல்யாணத்துக்கு பின்னாடி தா ஒனக்கு நெறைய வேல இருக்கு” ,  “போதூ அங்கிள் ரொம்ப ஓட்டாதீங்க” என்று பொய் கோபம் காட்டியவனின் மனநிலையை மாற்றும் விதமாக “சரி ஏ கம்பெனிலருந்து நா அனுப்ச்ச பொண்ணு எப்படி இருக்கா? ” .

“அவளுக்கென்ன அவ பாட்டுக்கு அவ வேலய பாத்துட்ருக்கா , ஆனா வாய் தா கொஞ்சோ ஜாஸ்தி” இதைக் கேட்டு வாய் விட்டு சிரித்த மனோகர் “நீ முதல் தடவையா ஒரு பொண்ண பத்தி இவ்ளோ ஃப்ரெண்ட்லியா பேசுறத இன்னக்கி தா நா பாக்குறே! அவ உண்மையிலேயே ரொம்ப நல்ல பொண்ணு பா” .

“உண்மதா அங்கிள்” என்று சிறு புன்னகையோடு கூறியவனுக்கு திடீரென ஏதோ நினைவுக்கு வர “அப்றோ அங்கிள் அந்த பொண்ணப் பத்தி உங்க கிட்ட ஒன்னு கேக்கணூ” ,  “என்னபா? ” ,  “நாள் நாளக்கி முன்னாடி ஒருத்தே” [யார் அவன் என்று சிந்தித்தவனுக்கு காவலர் கூறியது நினைவுக்கு வர] இந்த ஏரியா கவுன்சிலர் ஓட பையனா , அவே வந்து இந்த பொண்ணு வொர்கிங் டைம் முடிஞ்சு வெளிய போகும்போது வலுக்கட்டாயமா கடத்தீட்டு போகப் பாத்தா அங்கிள்” .

இதைக் கேட்டு கோபமான அவர் “ப்ளடி ராஸ்கல்! இங்கேயு வந்துட்டானா அவே? ” ,  “அவனப் பத்தி உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அங்கிள்? ” ,  “தெரியும்பா ஏ ஆபீஸ்ல அந்த பொண்ணு வேல பார்த்துட்டு இருந்தப்போ அங்க அப்பாவோட கட்சி மீட்டிங்கு பெரிய பேனர் வைக்கிறதுக்காக டிஜிட்டல் டிசைன் பண்ணி குடுங்கன்னு வந்தா அந்த வேலய நா வித்தியா கிட்ட தா கொடுத்தே.

வித்யாவ பார்த்த உடனே அவனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு போல இருக்கு அந்த வேல முடிஞ்சதுக்கு அப்புறமு கூட டெய்லி ஆபீஸ்க்கு வந்து வித்யா கிட்ட பேசிட்டு இருந்தா அந்த பொண்ணு இத ஃப்ரெண்ட்லியா எடுத்துக்கிச்சு, ஒரு நாள் திடீர்னு அவே லவ்வ சொல்லி இருக்கா அதுக்கு இந்தப் பொண்ணு நோ சொன்னவுடனே நீ என்ன லவ் பண்ணலன்னா நான் ஒன்ன கொன்னுடுவேனு மெரட்டி இருக்கா.

மறுநாள் ஆபீஸ்கு வந்து அந்த பொண்ணு என்கிட்ட நடந்ததெல்லா சொல்லுச்சு நா அவன கூப்பிட்டு மிரட்டுனே , நீ என்ன செஞ்சாலூ நா அவள விடமாட்டேன்னு அவே என்கிட்ட சொன்னப்போ அவன் கண்ணுல நா பார்த்த வெறியில இருந்தே அந்த பொண்ணு கிடைக்க அவே என்ன வேணூணாலூ செய்வான்னு எனக்கு புரிஞ்சது.

அதுக்கப்புறோ நா அவன் முன்னாடியே அந்த பொண்ண கூப்பிட்டு பேசினே , ஆனா அந்த பொண்ணு மனசுல அவன் மேல எந்த லவ்வு இல்லன்னு கிளியரா சொல்லிருச்சு அதக் கேட்ட உடனே அவே கண்ட்ரோல் இல்லாம அந்த பொண்ணோட கழுத்தப் புடிச்சு நெரிக்க ஆரம்பிச்சிட்டா ஆபீஸ்ல இருந்த எல்லாரு சேர்ந்து அன்னக்கி அவன் கிட்ட இருந்து அந்த பொண்ண காப்பாத்துறதுக்கு பட்ட பாடு இருக்கே அப்பா! ” என்று சொல்ல முடியாமல் அவர் விட்ட பெருமூச்சிலேயே அந்த வாசு வித்யா கிடைக்க வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதை புரிந்து கொண்டான்.

“என்ன செய்யிறதுன்னு தெரியாம நா கொழம்பிட்டு இருந்த நேரத்துல தா ஓ அப்பா ஏ ஆஃபீஸ்க்கு வந்து லோகோ டிசைனிங் வேலைக்கு நல்லா ஆளா இருந்தா சொல்லுன்னு கேட்டா என் கம்பெனியிலேயே ஒழுங்கா ஒர்க் பண்ற ஆளு இவ ஒருத்திதா இருந்தாலூ அந்த பொண்ண காப்பாத்துறது தா அப்போ எனக்கு பெருசா தெரிஞ்சது அதனால தா ஓ அப்பா கிட்ட இந்த பொண்ணு பண்ண டிசைன் எல்லா எடுத்து காமிச்சே.

இருந்தாலூ ஓ அப்பே நம்பலையே! அவனே நேர்ல ஒக்காந்து ஒரு டிசைன பண்ண சொல்லி பாத்ததுக்கு அப்பறந்தா அந்த பொண்ணுக்கு அப்பாயின்மென்ட் லெட்டர் கொடுத்தா இந்தப் பொண்ணு இங்க இருந்தா தா சேஃபா இருப்பான்னு நெனச்சுதா நா அனுப்பி வச்சே, ஆனா அவே இங்கேயு வந்து பிரச்சன பண்ணி இருக்கா இதுக்கு மேல இந்த பொண்ண அவே கிட்ட இருந்து காப்பாத்துறதுக்கு என்ன செய்யிறதுன்னு தெரியலையேப்பா? ” என்று கவலையுடன் வீரராகவனின் முகத்தை ஏறிட்டார்.

“நீங்க கவலப்படாதிங்க அங்கிள் என்கிட்ட விஷயத்த சொல்லீட்டிங்கல்ல இனி அந்த பொண்ணோட சேஃப்டிக்கு நா கேரன்டி” இந்த வார்த்தைகளை கேட்டவுடன் மனோகருக்கு பெரும் நிம்மதியாக இருந்தது. “சரிப்பா அப்ப நா கிளம்புறே” என்று எழுந்து சென்று கதவைத் திறந்தவர் “அப்பறோ வேல, வேலன்னு வேலயப் பாத்துக்கிட்டே ஆபீஸ்ல தூங்கிறாத ஒழுங்கா வீட்டுக்கு கெளம்பிப் போ இல்லன்னா நாளக்கி பொண்ண இங்க கூட்டிட்டு வந்துதா நிச்சயம் பண்ணனூ அப்பறோ ஓ அப்பா மண்டபத்துக்கு கொடுத்த காசு எல்லா வேஸ்ட்டாப் போய்ரூ” என்று மீண்டும் கேலி செய்ய “ஐயோ அங்கிள்! நா இன்னு கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு கெளம்பிப் போய்ருவே” என்று அவன் புன்னகையுடன் கூற “பாருடா மாப்பிள்ளக்கி வெக்கத்த சரி நாளைக்கி பங்க்ஷன்ல பாப்போ” என்று அவரும் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

மனோகர் கூறிவிட்டுச் சென்றதைப் பற்றி தீவிரமாக யோசித்துப் பார்த்தவன் இவர் கூறி விட்டுச் செல்வதைப் பார்த்தால் வாசு மீண்டும்  வித்யாவை கடத்திச் செல்வதற்காக நிச்சயமாக ஏதாவதொரு திட்டம் தீட்டுவான் என்று அவனுக்குத் தோன்றியது.

என்ன செய்யலாம் என்று யோசித்தவன் அலைபேசியை எடுத்து தன்னுடைய நண்பன் ஆதர்ஷுக்கு அழைப்பு விடுத்தான். இவனுடைய அழைப்பை ஏற்ற ஆதர்ஷிடம் சில நிமிடங்கள் தீவிரமாக பேசி ஆலோசனை செய்த பிறகு நிம்மதியான முகத்துடன் அழைப்பைத் துண்டித்தான். இந்த தடவ நீ என்ன பிளான் பண்ணிட்டு வந்தாலூ அந்தப் பிளான தவுடு பொடியாக்கி ஒன்ன ஆட்டத்துல இருந்தே தூக்கப் போர்றே” என்று தீர்மானமாக கூறினான் வீரராகவன்.

ஆனால் அங்கோ வாசு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டி விட்டு “இந்த தடவ பிளான் ரொம்ப பக்காவா இருக்கு நாளக்கி அவனுக்கு நிச்சயதார்த்தோ அவனால அந்த மண்டபத்துலருந்து வெளிய வரவே முடியாது, அதுதா எனக்கூ வேணூ நாளைக்கி இந்நேரோ அந்த வித்யா மிஸஸ் வித்யாவா ஏ கூட இருப்பா” என்று ஆனந்தமாக கூறிச் சிரித்தான்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam