Visitors have accessed this post 425 times.

நானே வருவேன் – பகுதி 7

Visitors have accessed this post 425 times.

 பாகம் 7

உதவியாளருடைய கனிவான பேச்சு வீரராகவனுடைய கோபத்தை சற்று தனித்து இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியைப் பற்றி சிந்தனை செய்ய வழி வகுத்தது. “கொஞ்ச நேரோ என்ன தனியா விடுங்க சார்” என்று தாழ்ந்த குறலில் வீர் சொன்னவுடன் அவனுக்கு தனிமை தேவை என்பதை புரிந்து கொண்ட உதவியாளர் ராமு மௌனமாக வெளியே சென்றார்.

நடந்தவற்றையெல்லாம் ஒரு முறை மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தவன் “எஸ் அவர் சொல்றது தா சரி” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு தன்னுடைய அலைபேசியை எடுத்து தன்னுடைய அப்பாவிற்கு அழைத்தான். முழுவதுமாக அழைப்பு மணி அடித்து முடித்தும் தன்னுடைய அப்பா தன்னுடைய அழைப்பை ஏற்காததை எண்ணி சற்று எரிச்சல் அடைந்த வீரராகவன் மீண்டும் அவருடைய எண்ணிற்கு அழைத்தான்.

இந்த முறை அவனைக் காக்க வைக்காது இரண்டாவது மணி ஒலித்த பொழுது அவனுடைய அழைப்பை ஏற்றார் அவனுடைய அப்பா செல்வராகவன். “சொல்லுபா வாஸ் ரூம்ல இருந்தே அதனால தா நீ ஃபஸ்ட் போன் பண்ணப்போ எடுக்க முடியல” என்று அன்பாக காரணத்தைக் கூறினார்.

“அப்பா நீங்க போன வாரோ மனோகர் அங்கிள் கம்பெனிக்கு போயிருந்தப்போ ஒரு பொண்ணுக்கு நம்ம கம்பெனியில ஜாப் கொடுக்குறேனு சொல்லி அப்பாயின்மென்ட் லெட்டர் கொடுத்தீங்களா அந்த பொண்ணு இன்னைக்கு வந்து வேலை கேட்டு நிக்குதுப்பா” ,  “அந்த பொண்ணு பேரு வித்யா வா” ,  “எனக்கு சரியா தெரியலப்பா”,   “சரி பரவால்ல அந்த பொண்ணா தா இருக்கூ வேலக்கி சேத்துக்கபா ரொம்ப தெறமையான பொண்ணு” .

“அப்பா நா நேத்து தாம்பா அந்த வேகன்டுக்கு ஆள் அப்பாயிண்ட் பண்ணே” ,  “ஓ அப்படியாப்பா ஆனா நா அந்த பொண்ணுக்கு ரெண்டு நாளைக்கி முன்னாடியே அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்துட்டனே” ,  “அதையே தா இந்த பொண்ணு சொல்லி வந்து சண்ட போட்டுட்டு இருக்கு நீங்க லெட்டர் கொடுத்தப்பவே வந்து இருந்தா இவ்ளோ பிரச்சனையே வந்திருக்காது” .

“என்னப்பா என்ன ப்ரச்சன? அந்த பொண்ணு கிட்ட வேக்கண்டுக்கு ஆள் எடுத்தாச்சு நீ வராதது ஓ மேல தா தப்புன்னு சொல்லி அனுப்பி வைபா” ,  “நா சின்ன குழந்தக்கி சொல்ற மாதிரி ரெண்டு மூணு வாட்டி சொல்லி புரிய வச்சுட்டேன்பா ஆனா இந்த குட்டிச் சாத்தா ஏ கேபினுக்கு முன்னாடியே  வந்து நின்னுகிட்டு நீங்க வந்து சொன்னாதா போவேன்னு சொல்லி அடம் புடிச்சி நின்னுட்டு இருக்குப்பா நீங்க ப்ளீஸ் கொஞ்சோ சீக்கிரமா கெளம்பி வாங்கப்பா இந்த மூஞ்ச பாக்க பாக்க எனக்கு அப்படியே இரிடேட் ஆகுது” என்று கண்ணாடி வழியாக வெளியே நின்று கொண்டிருந்த வித்யாவைப் பார்த்துக் கொண்டே சட்டென தொடர்பைத் துண்டித்தான் வீரராகவன்.

தன்னுடைய மகனின் கோபத்தை அவன் கூறிய வார்த்தைகளில் உணர்ந்து கொண்ட செல்வராகவன் வேகமாக தன்னுடைய ஆடைகளை மாற்றிக் கொண்டு மகிழுந்தில் பயணித்து அலுவலகத்தை வந்தடைந்தார்.

வேகமாக நடந்து வந்த செல்வராகவனை பார்த்ததும் வித்யா முகத்தில் சிறிது நிம்மதி படர்ந்தது. வேகமாக அவரிடம் வந்த வித்தியா “சார்!” என்று பேச ஆரம்பிக்கும் போது “ஒரு நிமிஷோ இரு” என்று சொல்லிவிட்டு தன்னுடைய பையனின் அறைக்குள் நுழைந்தார் செல்வராகவன். தன்னிடம் பேசாமல் உள்ளே சென்ற செல்வராகவனைப் பார்த்ததும் நிம்மதி படர்ந்த வித்யா முகத்தில் தற்போது கவலை படர ஆரம்பித்தது.

தன்னுடைய அப்பாவை பார்த்ததும் வீரராகவன் அவனுடைய இருக்கையில் இருந்து எழுந்து “வாங்கப்பா ஒங்களுக்காகத்தா வெயிட்டிங் ஒக்காருங்க” எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டான். “அங்கயே ஒக்கார வேண்டியதுதானபா” ,  “என்ன இருந்தாலூ நீங்கதா ஷீப் அதா” .

தன்னை எப்போதும் விட்டுக் கொடுக்காத மகனைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டவர் அவனுடைய தோள்களை தட்டிக் கொடுத்துவிட்டு அந்த இருக்கையில் சென்று அமர்ந்தார்.

“எப்பவூ பொறுமையா யோசிக்கிற ஒனக்கு ஏ இவ்ளோ கோவோ வந்துச்சு? யார்கிட்டயுமே நீ இவ்வளவு ரஃப்பா பிஹேவ் பண்ணதே இல்லையே? ” “என்னப்பா செய்றது சில ஜென்மங்கள் அப்படி நம்மள பண்ண வைக்கிது” ,  “ஓகே கூல் கூல் நா பாத்துக்குறே” .

“நா போய் அந்த பொண்ணு கிட்ட பேசீட்டு வரே” என்று இருக்கையில் இருந்து எழுந்த தன் தந்தையைப் பார்த்து ‘நீங்கள்ளா அந்த பொண்ணு  கிட்ட வெளியே போய் பேச வேண்டா அந்த பொண்ணு ஒன்னூ அவ்ளோ வொர்த்தில்ல வேணூனா உள்ள கூப்ட்டு பேசுங்க” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றான் வீரராகவன்.

வெளியே வந்த வீரராகவனைப் பார்த்து ‘என்ன ஒன்ன வெளிய அனுப்பீட்டாரா?’ என்று மனதுக்குள் நினைத்து கொண்டு நக்கலாக சிரித்தாள் வித்யா. அவளை அலச்சிமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்தை நோக்கி நடந்தான் அவன்.

எம்.டி தங்களிடம் வருவதைப் பார்த்த வேலையாட்டக்கள் எழுந்து நின்று “குட் மார்னிங் சார்” என்று வணக்கம் வைத்தனர். அவர்களுக்கு பதிலுக்கு காலை வணக்கம் வைத்துவிட்டு “சிட்! சிட்!” என்று அவர்களை அமர வைத்து விட்டு அலுவலக உணவகத்தை நோக்கி நடந்தான்.

அவனைப் பார்த்ததும் உணவகத்திலிருந்து பெரியவர் ரத்தினம் எழுந்து வந்து “வாங்க தம்பி சூடா போண்டா இருக்கு கொண்டு வர சொல்லவா?” என்று கேட்டார். “சரி. ரெண்டு பிளேட்டா கொண்டு வர சொல்லுங்க” என வீர் கூற எதுவும் புரியாமல் தலையை சொறிந்த பெரியவர் “ஆகாஷூ ரெண்டு பிளேட்டு போண்டா எடுத்துட்டு வா” என்று சத்தமாக உணவகத்தில் பணிபுரியும் பையனிடம் சொன்னார்.

அவன் இரண்டு தட்டு போண்டாவை கொண்டு வந்து மேஜையின் மேல் வைத்து விட்டுச் சென்றான். அங்கே வந்த வீரராகவனின் உதவியாளர் ராமு

“சார் நா போய் பெரிய எம்.டிக்கு என்ன ஹெல்ப் வேணும்னு பாத்து செஞ்சு குடுத்துட்டு வரே சார்” என்று கூற “வாங்க, இந்த ரெண்டு போண்டாவ சாப்டுட்டு போங்க அப்பதா அந்த ராட்சசிய சமாளிக்க முடியூ” என்று கூறினான் வீரராகவன். இதைக் கேட்டு சிரித்துக்கொண்டே அவன் அருகில் அமர்ந்தவர் அரக்கப்பரக்க போண்டாவை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.

“என்ன தம்பி ஏதாவது பிரச்சனையா? ” என்று கேட்ட பெரியவர் ரத்தினத்திடம் “ஒன்னூ இல்ல தாத்தா” என்று கூறிவிட்டு எதையோ யோசித்துக் கொண்டே போண்டாவை சாப்பிட்டு முடித்தான். அடுத்ததாக மேஜையின் மேல் சூடான தேநீரைக் கொண்டு வந்து வைத்தார் பெரியவர். அவரைப் பார்த்து சிரித்து விட்டு அந்த தேநீரை எடுத்து குடிக்கத் தொடங்கினான் வீர்.

அப்போது அங்கே வந்த உதவியாளர் ராமு “சார் ஒங்கள அப்பா கூப்புட்றாரு சார்” என்று சொன்னார். தேநீரை வேகமாக குடித்துவிட்டு “வாங்க போலா” என்று வீரராகவன் முன்னே செல்ல ராமு பின்னே சென்றார்.

தான் சென்றபோது அறையின் முன் நின்ற வித்தியா தற்போது இங்கே இல்லாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் வீர். “என்னப்பா கூப்பிட்டீங்களா? ” என்று கேட்டான் தன் தந்தையிடம் , “நம்ம போன வாரோ அந்த ஃபாரின் கிளைண்டுக்கு கொடுத்த ப்ராஜெக்ட்ல இருந்த லோகோ ரொம்ப நல்லா இருந்ததுல்லப்பா என்று கேட்டார் செல்வராகவன்.

“ரொம்ப நல்லா இருந்துச்சுப்பா” என்று தன்னுடைய அபிப்ராயத்தை கூறினான் வீர். அந்த லோகோவ இந்த வித்யா பொண்ணு தா டிசைன் பண்ணுச்சு” என்று அவர் கூற இதைக் கேட்டு சற்று ஆடித்தான் போனான் வீர்.

“இப்ப என்னப்பா செய்ய சொல்றீங்க? ” , ” நமக்கு வேல தா முக்கியோ ஆள் முக்கியமில்ல இப்போ நீ சேத்துருக்குர ஆளையூ இந்த பொண்ணையூ நம்மகிட்ட இருக்குற ப்ராஜெக்ட்லருந்து ஏதாவது ஒரு ப்ராஜெக்ட்டுக்கு லோகோ டிசைன் பண்ண சொல்லுவோ ரெண்டு பேர்ல யார் நல்லா டிசைன் பண்ணி தர்ராங்களோ அவங்கள நாம வேலக்கி வச்சுக்குவோ மீதி இருக்குற ஆள வேணாம்னு சொல்லி அனுப்பி விட்ருவோ” .

“இது நல்லா ஐடியாப்பா இது வொர்க் அவுட் ஆகும்னு தோணுது” ,  “நீ  இதுக்கு ஒத்துக்குவன்னு எனக்கு முன்னாடியே தெரியூ” என்று தன் மகனிடம் தன்னுடைய வியூகத்தை சொல்லிவிட்டு “ராமு!” என்று சத்தமாக அழைத்தார். “எஸ் சார்” என்று உள்ளே வந்த உதவியாளர் ராமுவிடம் ஃபினிஷிங் ரேஞ்சுல போய்கிட்டு இருக்குற ஒரு நாலு அஞ்சு ப்ராஜெக்ட் பைல எடுத்துட்டு வாங்க” என்று செல்வராகவன் கூற “ஓகே சார்” என்று கூறிவிட்டு ராமு அங்கிருந்து சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் ஐந்து ஆவணங்களுடன் அறைக்குள் நுழைந்தார் ராமு. அந்த ஆவணங்களை செல்வராகவனிடம் கொடுத்தார். அவர் வாங்கி அந்த ஆவணங்களை வீரராகவனிடம் கொடுத்தார். அவன் அதை தீவிரமாக புரட்டிப் பார்க்க ஆரம்பித்தான். அவனை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த ராமுவிடம் “நீங்க போய் ரெண்டு சிஸ்டம் அரேஞ்ச் பண்ணுங்க” என்று கூறி அனுப்பி வைத்தார் செல்வராகவன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் உள்ளே வந்த உதவியாளர் ராமு “சிஸ்டம் அரேஞ்ச் பண்ணியாச்சு சார்” என்று சொல்ல அப்பாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கையில் இருந்து எழுந்து அந்த இடத்திற்கு சென்றனர்.

வீரராகவன் உதவியாளரை அழைத்து சில விஷயங்களை அவரிடம் தெளிவாகக் கூற அங்கிருந்து அந்த பணிகளைச் செய்ய அவர் புறப்பட்டார். சில நிமிடங்களில் அந்த இடத்திற்கு புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்ட சின்னம் வடிவமைப்பாளரும், வித்யாவும் வந்து சேர்ந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்து செல்வராகவன் “இப்போ நீங்க ரெண்டு பேரூ ஒரு லோகோ டிசைன் பண்ணி கொடுக்கணூ,  யாரோட லோகோ எங்களுக்கு சாட்டீஸ் ஃபெக்சனா இருக்கோ அவங்க இந்த வேலைல இருக்கலா இன்னொருத்தவங்க எந்த எஸ்கியூஸு கேட்காம இங்கிருந்து போய்டனூ ஒங்க ரெண்டு பேத்துக்கூ ஓகேவா” என்று கேட்டார்.

இருவரும் தலையாட்ட “இப்போ நீங்க ரெண்டு பேரூ லோகோ டிசைன் பண்ணப் போறது ஒரு சின்ன கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு அவங்க நார்மலான பில்டிங் கட்டி தர மாட்டாங்க ரொம்ப ரிஸ்கியான, பாக்குறதுக்கு ரொம்ப அட்ராக்டிவா இருக்கிற மாதிரியான பில்டிங்ஸ் தா கட்டித் தருவாங்க அப்படிப்பட்ட கம்பெனிக்கு ஒரு லோகோ டிசைன் பண்ணனூ ஒங்களுக்கு ஒன் ஹவர் டைம் தரே அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரூ லோகோ டிசைன் பண்ணி முடிச்சிடனூ” என்று கூறிக் கொண்டே தன்னுடைய கைக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவர் “இப்போ ஒங்க ஒர்க்க ஸ்டார்ட் பண்ணுங்க” என்று வேலைக்கு பச்சை கொடி காட்டி விட இருவரும் தங்களுடைய கற்பனையை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

நேற்று வேலைக்கு சேர்ந்த நபர் எந்த பயமும் இன்றி தன்னுடைய பணியை செய்து கொண்டிருந்தார். ஆனால் வித்யாவிற்க்கு மிகவும் பதட்டமாக இருந்தது. தன்னுடைய சுடிதாரின் துப்பட்டாவினால் முகத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளை துடைத்துக் கொண்டே இருந்தால் இதை கவனித்த வீரராகவன் லேசாக தொண்டையைச் செருமினான்

அவனை நிமிர்ந்து பார்த்த வித்யா. தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து செல்வராகவனைப் பார்த்து “நா கொஞ்சோ பிரெஷ்ஷப் ஆயிட்டு வரே சார்” என்று கூறிவிட்டு வேகமாக அங்கே இருந்து சென்றாள். இதைப் பார்த்து வீரராகவன் சத்தம் வராமல் சிரித்துக் கொண்டான்.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam