Visitors have accessed this post 630 times.

வாதம், பித்தம், ஐயம் என்றால் என்ன? இவை மனித உடலில் எவ்வாறு முக்கிய பங்கு வகுக்கிறது?

Visitors have accessed this post 630 times.

வாதம், பித்தம், ஐயம் என்றால் என்ன?

இவை மனித உடலில் எவ்வாறு முக்கிய பங்கு வகுக்கிறது? 

 

இறையனுபவ நிலையை அடைவதில் முயன்று வெற்றி பெற்றவர்ளே சித்தர் எனப்படுவர். 

சித்தி பெற்றவரும் சித்தியுடையவரும் சித்தர் எனப் பெயர் பெறுவார். இவர்கள் காலம், 

இடம், சாதி சமயங்களை கடந்தவர்களெனக் கறுதப்படுவர். 

உடலும் உயிரும் நீண்ட நெடுங்காலம் அழியாது காக்க உதவும் ஓகம், வாதம், 

மருத்துவம் முதலிய முறைகளை கையாண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் ஆய்வில் கிடைக்கப்பெற்ற 

பொருட்களை மக்களின் பிணி நீக்கும் மருந்தாக்கி பயன் கண்டனர். இவர்கள் தங்களுக்குள் பல கலைகளை 

வைத்திருந்தார்கள் அவர்களிடையே  அகத்திய முனிவர் என்பவர் மிகவும் பெயர் போனவர்.

நோய்

மனித உடல் இயக்கத்தை வாதம், பித்தம், ஐயம் என்ற மூன்று முக்கிய கூறுகளே தீமானிக்கின்றன. 

இம்மூன்றும் உடலிலிருந்து வெவ்வேறு தொழில் புரியும் இன்றியமையாக் கூறுகளே  ஆகும்.

வாதம் 

மூச்சினை ஒழுங்குபடுத்துதல் புத்துணர்ச்சியூட்டல், மனம், மொழி, சரிவர நடத்துதல், 

உடல் நிலைபேற்றுக்கு உரிய பல்வேறு தாதுக்களை உண்டாக்குதல்,

கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல் ஆகியவை வாதத்தின் தொழில்களாகும். 

பித்தம் 

உண்ட உணவை செரிக்க வைக்கவும், அறிவையும் நினைவாற்றலை வழங்கவும், 

குருதிக்கு நிறம் வழங்கவும், பார்வைத்திறன் அளிக்கவும், தோலிற்கு பளபளப்பு நல்கவும் 

உதவுவதே பித்தத்தின் தொழிழாகும். 

ஐயம் 

தசை நார்களின் மழமழப்பான இயக்கத்திற்கு உதவுவதே ஐயமாகும்.

வயிற்றில் உணவை ஈரமாக்கி கரைக்கவும், இடையறாது இயங்கும் இதயம் 

சூடேறாமல் பாதுகாக்கவும், நாவில் சுவையுணர்வும் ஈரமும் நிலைத்திருக்குமாறு செய்யவும்,

மூட்டுகள் இயக்கத்தால் தேய்வுறாமல் காக்கவும் ஐயம் பயன்படுகிறது. 

இவ்வாறு தொழில் புரியும் வாதம், பித்தம், ஐயம் என்ற மூன்று கூறுகளும் 

உணவு, உழைப்பு ஆகியவற்றின் ஒவ்வாமையினால் மிகுதலும் நேரும் போது நோய் தோன்றும். 

இது கருதியே திருவள்ளுவரும்,

                ” மிகினுங் குறையுனு நோய் செய்யு நூலோர் 

                  வளிமுதலா வெண்ணிய மூன்று ”     

                                                                                – என்றார் 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam