Visitors have accessed this post 249 times.

சித்தி கொடுமை

Visitors have accessed this post 249 times.

அபி மிகவும் நன்றாக படிக்க கூடியவள். அவள், சிறு வயதில் தன் தாயை இழந்தவள். அபிக்கு ஒரு அக்கா ஒரு தங்கை என இரு சகோதரிகள். இதனால், அபியின் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே, இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேட ஆரம்பித்தனர்.

அப்பொழுது, அவர்களின் தூரத்து சொந்தத்தில் ஒரு பெண் அபியின் அப்பாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முன் வந்தார். எனவே அந்தப் பெண்ணையே மணப்பெண்ணாக தேர்வு செய்தனர். திருமணத்திற்கான வேலைகள் எல்லாம் வெகு விமர்சியாக நடந்து கொண்டிருந்தது. திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் சொந்த பந்தங்கள் அனைவரும் அபியின் வீட்டிற்கு வர தொடங்கினர். முன்பு சொன்னது போலவே அபி மிகவும் நன்றாக படிக்க கூடிய பெண் என்பதால் பள்ளிக்கூடத்திற்கு லீவ் போடாமல் சென்று கொண்டிருந்தாள். ஆனால், அபியின் அக்காவும் தங்கையும் லீவ் போட்டுவிட்டு வீட்டில் வந்து இருக்கும் உறவுக்கார குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்து கொண்டிருந்தனர். 

அபி அக்காவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவள் அமைதியான ஒரு பெண் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள். இதற்கு மாறாக அபியின் தங்கை மிகவும் துறுதுறுவென இருப்பாள். அவளுக்கு, சற்று கோபம் அதிகமாகவே வரும். ஆனால் அபி இருவரிடத்திலிருந்தும் ரொம்ப மாறுபட்டவள். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் அபி, தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவள். அபின் அக்காவும் தங்கையும் அபியை வீட்டில் இருக்க சொல்லி மிகவும் வற்புறுத்தினர். திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அபியும் தன் அக்காவும், தங்கையும் சொல்வதைக் கேட்டு வீட்டில் இருக்க சம்மதித்தாள்.

ஒருவழியாக திருமணமும் வந்தது, விடிந்தால் திருமணம் என்ற நிலையில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். காலையில் விடிந்ததும் அனைவரும் சீக்கிரமே கிளம்பி திருமணத்திற்கு தயார் ஆகினர். அவர்களின் சொந்த கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை 9:30 மணி அளவில் திருமணம் நடைபெற இருப்பதால் அனைவரும் 8 மணி அளவில் கோவிலுக்கு சென்று விட்டனர்.

அங்கு எல்லா ஏற்பாடுகளும் முன்னதாகவே செய்யப்பட்டிருந்ததால், அனைத்தும் அனைத்தும் தயாராகவே இருந்தது. திருமண நேரமும் வந்தது, “சுற்றி இருக்கும் உறவினர்கள் சூழ அனைவரது ஆசீர்வாதத்தோடும்” அபியின் அப்பாவிற்கு இரண்டாவது திருமணம் வெகு விமர்சியாக நடைபெற்றது. அபி மற்றும் அவளது சகோதரிகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் கடந்தது.

அபியின் சித்தி அபியையும் அவளது சகோதரிகளையும் மிகவும் நன்றாகவே கவனித்து வந்தார். இந்த நிலையில் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கடந்தது, அபியின் சித்தி தனது சுய ரூபத்தை காட்டு தொடங்கினார். காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் அபிக்கும் அவளது சகோதரிகளுக்கும் காலை உணவு தயார் செய்யாமல் ‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று படுத்துக்கொண்டாள். ஆனால் அதிகம் அவளுக்கு சகோதரிகளும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவர்களே தங்களுக்கு காலை உணவு தயார் பண்ணி சாப்பிட்டு சித்திக்கும் சாப்பாடு கொடுத்துட்டு போயிட்டாங்க.

ஆனால்  சித்தி தினமும் இதையே செய்ய தொடங்கினார் இதனால் அபியும் அவளது சகோதரிகளும் சற்று மன கஷ்டத்திற்கு உள்ளானார்கள். இந்த நிலையில் அபியின் சித்தி கர்ப்பமாக இருந்தாள். அபியும் அவளது சகோதரிகளும் அவர்களின் சித்தியை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். இப்படியாக சில மாதங்கள் கடந்து பின்பு அபியின் சித்திக்கு பிரசவ காலம் நெருங்கியது. இதனை அடுத்து அபியின் அக்காவை பள்ளிக்குப் போக வேண்டாம் என்று நிறுத்தி சித்திக்கு துணையாக வீட்டிலேயே இருக்குமாறு அப்பா கூறினார். அப்பா கூறியதை ஏற்றுக்கொண்டு அபியின் அக்காவும் தனது சித்திக்கு துணையாக வீட்டில் இருக்க ஒப்புக் கொண்டாள். பள்ளிக்குப் போகும் தனது தங்கைகளுக்கு காலை உணவு தயார் செய்து அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு அவளின் சித்திக்கு தேவையானவை அனைத்தும் செய்து கொடுத்துக் கொண்டு அபியின் அக்கா வீட்டை நன்றாக கவனித்துக் கொண்டிருந்தாள். அபிநயா அக்கா வீட்டில் இருந்து இரண்டு நாட்கள் கடந்த நிலையில் அபியின் சித்திக்கு பிரசவ வலி வரத் தொடங்கியது.

என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப்போன அபியின் அக்கா அருகில் இருக்கும் தனது உறவினர்களை அழைத்தாள். உறவினர்கள் வந்து அபியின் சித்தி மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். மருத்துவமனையில் அபியின் சித்தியை சோதித்த மருத்துவர்கள் பிரசவத்தில் நிறைய சிக்கல்கள் இருப்பதாகவும் ஆப்ரேஷன் தான் பண்ணனும் என்றும் கூறினர். இதனை அடுத்து ஒரு வழியாக ஆபரேஷன் பண்ணி அபியின் சித்திக்கு பிரசவம் நடந்தது. அபியின் சித்திக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது அபியின் சித்தி சந்தோஷத்தில் திகைத்து இருந்தாள். ஆனால் அபியின் அப்பாவிற்கு சின்ன மன வருத்தம் ஏனெனில் ஏற்கனவே அபி அவரது அக்கா தங்கை என மூன்று பெண் குழந்தைகள் இருந்த நிலையில் நான்காவது பெண் குழந்தையாக பிறந்ததால் அவியின் அப்பாவிற்கு சின்ன மன வருத்தம் இருந்தது.

பிரசவம் நல்லபடியாக முடிந்த நிலையில் வீட்டிற்கு வந்த அபியின் சித்தியின் சுயரூபம் வெளிவர தொடங்கியது. அதுமட்டுமின்றி, நாளுக்கு நாள் அது கொடுமையாக மாறியது. இப்படியாக நன்றாக கவனித்துக் கொண்டிருந்த அபியின் சித்தி இப்பொழுது தன் குழந்தை பிறந்ததும் அபியையும் அவளது சகோதரிகளையும் வெறுத்து ஒதுக்க தொடங்கினாள். தன் குழந்தையையும் அபி மற்றும் அவளது சகோதரிகளையும் பிரித்துப் பார்க்க தொடங்கினாள் பாகுபாடு காட்டினாள்.

ஒரு நாள் இது எல்லை மீறி அபியையும் அவளது சகோதரிகளையும் ஆவியின் சித்தி அடித்து துன்புறுத்த ஆரம்பித்தால் மனசாட்சியே இல்லாமல் அபியும் தங்கை துருத்துருவென சேட்டை செய்வதால் அவளுக்கு சூடு வைத்தாள். அதையும் அவளது சகோதரிகளும் அழத் தொடங்கினர் அவர்களை வீட்டிற்கு வெளியில் விட்டு கதவை சாத்தினாள் சித்தி. அபியின் அப்பா வந்ததும் மூவரும் சென்று அவர்களின் அப்பா கிட்ட சித்தி தங்கச்சி சூடு வைத்த விசயத்தை அபி கூறினாள் இதைக் கேட்டு அவ்வளவு அப்பா அதிர்ந்து போனார்.

அபியின் சித்தியிடம் போய் விசாரிக்க தொடங்கினார் அவியின் அப்பா…….

Leave a Comment

Write and Earn with Pazhagalaam