Visitors have accessed this post 411 times.
குறுகலான நீண்ட இலைகளையும் நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகை. தமிழகத்தினுன் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.
அறுகம்புல்லின் மருத்துவக் குணங்கள் ;
1. கணு நீக்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 2 மணி நேரத்துக்கு ஒரு முறை குடித்து வந்தால்
✅ காது,
✅ மூக்கு,
✅ ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும்.
✅ வெப்பம் தணியும் மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.
2. கணு நீக்கிய அறுகம்புல் 30 கிராம் வெண்ணை போல் அரைத்து சம அளவு வெண்ணை கலந்து 20 முதல் 40 நாள் வரை சாப்பிட
✅ உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும்.
✅ அறிவு மிகுந்து முக வசீகம் உண்டாகும்.
3. அறுகம்புல் 30 கிராம், கீழா நெல்லி 15 கிராம் இவற்றை மையாய் அரைத்த்து தயிரில் கலக்கி காலையில் குடிக்க
✅ வெள்ளை மேக அனல்,
✅ உடல் வறட்சி,
✅ சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர் கடுப்பு,
✅ சிறுநீருடன் ரத்தபோதல் ஆகியவை தீரும்.
4. அறுகம்புல் 30 கிராம் அரைத்து பாலில் கலந்து பருகி வர
✅ இரத்த மூலம் குணமடையும்.
5. வேண்டிய அளவு அறுகம்புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணிநேரம் கழித்து குளித்து வர
✅ சொறி சிரங்கு,
✅ அடங்காத தோல் னாய்,
✅ வேர்க்குரு,
✅ தேமல்,
✅ சேற்றுபுன்,
✅ அரிப்பு,
✅ வேனல் கட்டி தீரும்.