Visitors have accessed this post 744 times.
தேங்காய் பால்பூண்டு கஞ்சி
தேவையான பொருள்கள் பச்சரிசி – ஒரு கப்,
வறுத்த பாசி பருப்பு – அரை கப், தேங்காய் – ஒரு மூடி அல்லது ரெடிமேட் தேங்காய்ப் பால் – ஒரு டின், வெந்தயம் – ஒரு தேக்கரண்டி,
உரித்த பூண்டு – 10 பல்,
உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 8 கப்
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.அரிசி மற்றும் பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசி, பாசிபருப்பு மற்றும் வெந்தயத்தை கழுவி போடவும்.அரிசி பாதியளவு வெந்ததும் உரித்த பூண்டை சேர்த்து வேக விடவும்.அரிசி குழைய வெந்ததும் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.அடுப்பிலிருந்து இறக்கியதும் தேங்காய்ப் பாலை சேர்க்கவும்.சுவையான தேங்காய்ப் பால் பூண்டு கஞ்சி ரெடி.