Visitors have accessed this post 780 times.
தியானத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்
தியானம் என்றால் என்ன?
நீங்கள் மனதாலோ அல்லது உடலாலும் எதுவும் செய்யாமல் எல்லா நடவடிக்கைகளும் முடிந்த நிலையில் நீங்கள் வெறுமனே, வெறும் உணர்வாய், சாட்சியாய் இருப்பதுதான் ,தியானம் எனப்படுவது. நீங்கள் அதற்காக எதுவும் செய்ய வேண்டியதில்லை. இவைகளை நன்றாக புரிந்து கொண்டாலே போதும்.
எப்பொழுது உங்களுக்கு ஓய்வு கிடைக்கிறதோ, அப்பொழுது உங்களது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு நீங்கள் வெறும் உள் உணர்வாய் இருங்கள். நினைப்பது அடுத்த ஒன்றின் மேல் கவனம் வைப்பது மற்றும் ஆழ்ந்த சிந்தனை அனைத்தும், அந்த நடவடிக்கைகளில் ஒன்றுதான். இவைகளை விடுத்து ஒரு சில வினாடிகள் ஆவது நீங்கள் உங்கள் உள் மையத்தில் இருந்தால், மிகவும் ஓய்வு தன்மையில் இருந்தால், அதுவே தியானம் ஆகிறது .அதை அடைவது எப்படி என்று புரிந்து கொண்டால் அதில் நீங்கள் விரும்பியவாறு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்க முடியும் உங்களால் ஏன் ,அதில் 24 மணி நேரமும் இருக்கவும் முடியும்.
நீங்கள் அதில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருக்க முடிந்தால், அந்த பாதையை சரியாக புரிந்து கொண்டால், நீங்கள் உங்கள் விருப்பப்படி அதிலிருந்து பிரக்ஞையோடு வெளியே வந்து, பல காரியங்களை செய்யலாம். ஆனால் உங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது. இந்த நிலையில் இரண்டாவது நிலையாகும் முதலில், பிரக்ஞை
நிலையை, விழிப்பு நிலையை பூர்ணமாக அடைதல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து அதில் இருந்து வெளியே வந்து சில காரியங்களை எப்படி நடத்துவது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, தரையை சுத்தம் செய்யும் பொழுது, நீரில் குளிக்கும்போது நீங்கள் உங்கள் மனநிலையில் இருந்து நழுவாமல், இவைகளை செய்ய முடியும் பிரச்சனை உள்ள செயல்களில் அதே நிலையில் ஈடுபடமுடியும்.
தொடரும்…